தமிழகத்திற்கு நிதி அதிகரிப்பு

மத்திய அரசு வரும் 2024ம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு கடந்த 2020 – 2021ம் நிதியாண்டில் 924.99 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதில் 544.51 கோடி ரூபாயை மட்டுமே மாநில அரசு பயன்படுத்தியது. தற்போது அந்த நிதியை நான்கு மடங்கு உயர்த்தி 3,691.21 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. ஜல் ஜீவன் மிஷன் தொடங்கப்படும் முன் ​​தமிழகத்தில் உள்ள 1.26 கோடி வீடுகளில், வெறும் 21.65 லட்சம் வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது. ஆனால், ஜல் ஜீவன் துவங்கப்பட்ட பிறகு கடந்த 22 மாதங்களில், 18.70 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை மேலும் விரைவுபடுத்த, திட்டம் செயல்படுத்தப்படும் வேகத்தை தமிழக அரசு 179 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.