வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் சுந்தர். இவர், தி.மு.கவில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகிக்கிறார். இவரது மனைவி வித்யா. இவர்களுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன, மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருக்குள்ள வேறு பெண்களுடன் தொடர்பு, வேறு பெண்ணுடன் சுந்தருக்கு இருந்த தொடர்பு குறித்து அவரது மனைவி எடுத்த வீடியோ, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட காரணங்களால், தன் மனைவியிடம், “நான் தி.மு.ககாரன். நாங்கள்தான் ஆளும் கட்சி. நீ, எடுத்த வீடியோவை என்னிடம் கொடுத்துவிடு. என் பதவிக்கு ஏதாவது பிரச்னை ஆனது என்றால், நீ உட்பட உன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் லாரி ஏற்றி கொன்றுவிடுவேன்” என மிரட்டியுள்ளார் சுந்தர். இதனையடுத்து, வித்யா காவல் நிலையத்தில் புகார் தந்தார். புகாரை குறித்து சுந்தரை விசாரிக்க காவலர்கள் தொடர்பு கொண்டபோது, “எனக்கு வேலை இருக்கிறது. ஆளும் கட்சிக்காரனையே ஸ்டேஷனுக்குக் அழைக்கிறீர்களா?” என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் சுந்தர். தற்போது அவர் மீது, வரதட்சணை, கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் காவல்துறையினர்.