கடந்த வாரம் நடைமுறைக்கு வரும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, 50 லட்சம் பயனர்களைக் கொண்டவாட்ஸ்அப் இந்தியாவுக்கான தனது குறை தீர்க்கும் அதிகாரியாக பரேஷ் பி லாலை அந்த நிறுவனம் நியமித்துள்ளது. புதிய கொள்கைகளின்படி, ஒரு குறைதீர் அதிகாரி, நோடல் அதிகாரி மற்றும் ஒரு தலைமை இணக்க அதிகாரியை நியமிக்க வேண்டும்.இந்த பணியாளர்கள் பாரதத்தில் வசிக்க வேண்டும். அதன்படி தற்போது வாட்ஸ்அப்பால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியை, பரேஷ் பி லால், வாட்ஸ்அப் அட்டென்ஷன்: குறைதீர் அதிகாரி, அஞ்சல் பெட்டி எண் 56, சாலை எண் 1, பஞ்சாரா ஹில்ஸ் ஹைதராபாத் – 500 034 தெலுங்கானா என்ற முகவரியில் தொடர்புக் கொள்ளலாம். இதேபோல, கூகுள், முகநூல் உள்ளிட்ட பெரிய டிஜிட்டல் நிறுவனங்களும் புதிய சமூக ஊடக விதிகளின்படி குறை தீர்க்கும் அதிகாரிகளின் நியமனத்தை பிரதிபலிக்கும் வகையில் தங்கள் வலைத்தளங்களை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளன.