இன்று (மே 26) வானில் முழு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடலை ஒட்டிய இடங்களில் இந்த சந்திர கிரகணம் தெரியும். பாரதத்தில், பெரும்பாலான வட கிழக்குப் பகுதிகள், மேற்கு வங்கத்தின் ஒரு சில இடங்கள், ஒடிசா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சில கடற்கரைப் பகுதிகளில் சந்திர உதயத்திற்குப் பிறகு, பகுதி சந்திரகிரகணம் குறுகிய காலத்திற்கு தெரியும்.இந்த சந்திர கிரகணம், இந்திய நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்குத் தொடங்கும்.முழு சந்திர கிரகணம், மாலை 4:39 மணிக்குத் துவங்கி, 4:58 மணிக்கு நிறைவடையும்.மாலை 6:23 மணிக்கு முடிவடையும்.அடுத்த சந்திர கிரகணம், 2021, நவம்பர் 19ல் பாரதத்தில் பகுதி சந்திர கிரகணமாக தெரியும்.பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும்போது, வளி மண்டல ஒளிச் சிதறல் காரணமாக ரத்தச்சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக காட்சி அளிக்கும்.ஆரஞ்சு நிறத்திலிருந்து ரத்த சிவப்பு வரையிலான நிறங்களில் தெரிவதால் இது ‘ரத்த நிலா’ என அழைக்கப்படுகிறது.