மத்தியபிரதேசத் தலைநகர் போபாலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 1,000 படுக்கை வசதி கொண்ட ‘மாதவ சதாசிவ கோல்வல்கர்’ மருத்துவமனையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துவங்கியுள்ளது. இதில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என 200 பேர் பணியாற்றுகின்றனர். ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் 25 நிறுவப்பட்டுள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான உணவு, மருந்து, யோகா, மூச்சுப் பயிற்சிகள் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் இந்த மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் நேற்று காலை மருத்துவமனையை திறந்து வைத்தார்.