ஊராட்சி தலைவரின் கண்ணியம்

மீஞ்சூர் ஒன்றியம் திருவேங்கிடபுரம் பகுதியில், கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் ஒருவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டிற்கு நேரிடையாக கொண்டு வரப்பட்டது. அங்கு, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி வைக்கப்பட்டு இருந்தது. தொற்று அச்சம் காரணமாக, சடலத்தை புதைக்க கூலியாட்கள், உறவினர்கள் யாரும் முன் வரவில்லை. தகவல் அறிந்த அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் பாபு, வார்டு உறுப்பினர் பாலாஜி, சமூக ஆர்வலர் பிரேம்குமார் மற்றும் ஜெய்கிருஷணன் ஆகியோர் கவச உடைகளை அணிந்து கொண்டு சுகாதாரத் துறையினர் வழிகாட்டுதல்களை பின்பற்றி சடலத்தை புதைத்தனர். (நன்றி: தினமலர்)