அலைபேசி தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டமாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் 5 ஜி தொழில்நுட்ப சோதனைகளை நடத்த பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோஇன்போகாம், வோடபோன் ஐடியா, எம்.டி.என்.எல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதில், எரிக்சன், நோக்கியா, சாம்சங் மற்றும் சி-டாட் உள்ளிட்ட நிறுவனங்களின் உட்கட்டமைப்பு தளவாடப் பொருட்களை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது மத்திய அரசு. ஆனால், தேச பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் மிகப்பெரிய 5 ஜி தொழில்நுட்ப நிறுவனமான ஹூவை, இசட்.டி.இ நிறுவனங்களின் தளவாடங்களை இதில் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உளவு பார்ப்பது தொடர்பான பாதுகாப்பு காரணங்களால் இந்த நிறுவனங்களை ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகள் ஏற்கனவே தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.