ராணுவ அவசரகால நிதி அதிகாரம்

கொரோனா பரவலுக்கு எதிரான பணிகளில் நமது ராணுவம் மிகத்தீவிரமாக பணியாற்றி வருகிறது. மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ தளவாடங்களை எடுத்து வருவது தேவைப்பட்டால் மருத்துவர்கள் மருத்துவ உதவியாளர்களை ராணுவ ஹெலிகாப்டர்களில் அழைத்து செல்வது மட்டும் இல்லாமல் தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பது, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது என பல்வேறு பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொரோனாவுக்கு எதிரான போரில், ராணுவத்தின் நடவடிக்கைகளை வேகப்படுத்த ராணுவத்துக்கு அவசர கால நிதி அதிகாரம் வழங்கப்படுகிறது. கமாண்டர்கள், ஏரியா கமாண்டர்கள் ரூ. 50 லட்சமும் டிவிஷன் கமாண்டர்கள், ஏரியா துணை கமாண்டர்கள் ரூ. 20 லட்சமும் செலவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.