நாராயண் காக்கா என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகரான நாராயண் தபட்கர். 85 வயதான இவர் கொரோனா சிகிச்சைக்கு தனக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவமனை அனுமதியை 40 வயதான மற்றொருவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு வீடு திரும்பினார். வீட்டில் மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் மரணமடைந்தர். இது தேசமெங்கும் பாராட்டப்பட்டது. இதனை சுட்டிக்காட்டியுள்ள மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ‘மகாராஷ்டிர அரசின் சுகாதார அமைப்பின் பிரதிபலிப்பு. இதுதான் உங்கள் அரசின் லட்சணம், நாம் சற்று முன்பாகவே இதை போன்ற கடினமானதொரு நிலைக்கு தயாராகியிருந்தால், இன்னும் கொஞ்சம் விழிப்புடன் இருந்திருந்தால் இந்த சூழ்நிலையைத் தவிர்த்திருக்க முடியும். இருவரும் உயிர் வாழ்ந்திருக்கலாம். நமது கூட்டுத் தோல்விதான் நம்மை இங்கு நிறுத்தியுள்ளது’ என வேதனை தெரிவித்தார்.