கொரோனா நோயாளிகளுக்கு உதவ பா.ஜ. இளைஞரணி சார்பில் ‘ஹெல்ப்லைன்’ எனப்படும் தொலைபேசி வசதியை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வீடியோ கான்பரன்சிங் வழியாக துவக்கி வைத்தார். கொரோனாவுக்கு சிகிச்சை தொடர்பான உதவி தேவைப்படுவோர் நாட்டின் எந்தப் பகுதியில் வசித்தாலும் அவர்கள் 080 6817 3286 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு பா.ஜ.க தொண்டர்கள் தேவைப்பட்ட உதவிகளை செய்து தருவார்கள். அத்துடன் இந்த எண்ணில் மருத்துவ ஆலோசனையும் பெறலாம். இதற்காக 350க்கும் அதிகமான மருத்துவர்கள் மக்களுக்கு உதவ காத்திருக்கின்றனர்.