உலகிலேயே அதிகமாகவும் வேகமாகவும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது, நோய் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது என அரசின் சீரிய செயல்பாடுகளால் உலகிலேயே மிகக்குறைந்த உயிரிழப்பை பாரதம் பதிவு செய்துள்ளது. இதனை உலக நாடுகளே போற்றுகின்றன. ஆனால், எதையும் ஆராய்ந்து பார்க்காமல், இந்த வேகம் போதவில்லை, மற்ற நாடுகளைப் பாருங்கள் என வாய்கூசாமல் பொய் சொல்கின்றன நமது எதிர் கட்சிகள்.
இவர்கள் கைகாட்டும் சில நாடுகளின் மக்கள்தொகை கணக்குப்படி, அமெரிக்கா – 33.1 கோடி, ரஷ்யா -14.6 கோடி, ஜெர்மனி – 8.5 கோடி, துருக்கி – 8.4 கோடி, இங்கிலாந்து – 6.8 கோடி, பிரான்ஸ் – 6.5 கோடி, இத்தாலி – 6.1 கோடி, ஸ்பெயின் – 4.7 கோடி, போலந்து – 3.8 கோடி, ருமேனியா – 1.9 கோடி, நெதர்லாந்து – 1.7 கோடி, கிரீஸ் – 1.7 கோடி, பெல்ஜியம் -1.2 கோடி, செக் குடியரசு – 1.1 கோடி, போர்ச்சுகல் – 1.1 கோடி, சுவீடன் – 1 கோடி, ஹங்கேரி – 1 கோடி, சுவிட்சர்லாந்து – 0.9 கோடி, பல்கேரியா – 0.7 கோடி, டென்மார்க் – 0.6 கோடி, மீதமுள்ள 25 சிறிய ஐரோப்பிய நாடுகள் – 6 கோடி, பிரேசில் – 21.2 கோடி, அர்ஜென்டினா – 4.45 கோடி ஆக மொத்தம் – 136.95 கோடி.
இவ்வளவு நாடுகளின் மொத்த மக்கள்தொகையை கூட்டினாலும் பாரதத்தின் மக்கள்தொகையான 138 கோடிக்கு ஈடாக முடியாது. பாரதத்தை நிர்வகிப்பது இத்தனை நாடுகளையும் ஒருங்கே நிர்வகிப்பதற்கு சமம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் இணைந்து சீனா, பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை, கொரோனாவால் ஏற்பட்டுள்ள தற்காலிக தொழில்துறை பிரச்சனை, உலகளாவிய தொழில் மந்த நிலை, மக்கள் முன்னேற்றம், எதிர்கட்சிகளின் சிறுபிள்ளைத்தனமான பொய் பிரச்சாரங்கள் என ஒரே சமயத்தில் பாரதத்திற்குஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே, நாட்டை திறம்பட நிர்வகிப்பது அத்துனை எளிதானதல்ல. அதனை திறம்பட செய்யும் நம் மத்திய அரசுக்கு இவர்கள் பாராட்டினை தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. புறம் கூறாமலாவது இருக்கலாம்.
நம்முடைய சொந்த நாட்டை வீழ்த்துவதற்கு நம்மில் சிலர் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள் என்பது வேதனையான ஒன்று.