சி.ஏ.ஏ போராட்டம் என்ற பெயரில், முஸ்லிம்கள் திட்டமிட்டு நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், ஐ.பி உளவுத்துறை அதிகாரி உட்பட பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர், வீடுகள், வாகனங்கள், பொதுச் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முன்னாள் ஜே.என்.யூ மாணவரான உமர் காலித் முக்கிய நபர். வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக கடந்த 2020 பிப்ரவரி 25ல் அவருக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணையில், காலித்திற்கு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. எனினும், அவர் இது சம்பந்தமாக வேறொரு வழக்கிலும் கைதாகியுள்ளார். அதற்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதனால் ஒரு வழக்கில் அவர் ஜாமின் பெற்றாலும் சிறையில்தான் இருக்க வேண்டும்.