மேற்கு வங்கத்தில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுக்கு மத்தியில் மக்களிடம் பயத்தை உருவாக்கவும் வன்முறையை தூண்டவும் பயன்படுத்தப்படவிருந்த 14 நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறை கைப்பற்றி அழித்தது. இத்துடன் இந்த வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பட்பாராவின் மெட்ரல் ஜாய்சண்டிடாலா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து, வெடிகுண்டுகள், வெடிகுண்டு தயாரிக்கும் கருவிகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டன. மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலை சீர்குலைக்கும் நோக்குடன் பல்வேறு இடங்களில் இது போன்ற வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதை புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. கடந்த நான்காவது கட்ட வாக்குப்பதிவில் கூச் பிஹாரில் உள்ள சிதால்குச்சி வாக்குச் சாவடியில் 18 வயது சிறுவன் திருணமூல் குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதனையடுத்து வன்முறை வெடித்தது. அந்த வன்முறை கும்பல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எப் வீர்ர்களை தாக்கினர். ஆயுதங்களையும் பறித்தனர். இதற்கு வீர்ர்கள் அளித்த தகுந்த பதிலடியில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.