தனது குடும்பத்தினருக்கு, உறவினருக்கு ஆதாயம் பெற நேர்மையற்ற முறையில் உதவுதல், பணியமர்வு தருதல், இவைகளுக்காக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் போன்றவை ஆங்கிலத்தில் நெப்போடிசம் எனப்படும். இந்த நெப்போடிசம் வழக்கில் கேரள அமைச்சர் அமைச்சர் கே.டி.ஜலீலை குற்றவாளி என லோகாயுக்தா நீதிமன்றம் கூறியுள்ளது. ஜலீல் தனது உறவினர் கே.டி.தீப்பை கேரள மாநில சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிக் கூட்டுறவு நிறுவனத்தில் பொது மேலாளராக நியமித்திருந்தார், இதற்காக அவர், நியமன தகுதிகளை தளர்த்தியுள்ளார். இதனால் அவர், தான் பதவியேற்றபோது செய்த சத்திய பிரமாணத்தை மீறிவிட்டார் என இந்த வழக்கை தாக்கல் செய்த வி கே முஹம்மது ஷாபி கூறியுள்ளார். இதனால், அவரை பதவியில் இருந்து நீக்குமாறு முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.