அமெரிக்க ஜனநாயகக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான துளசி கபார்ட், வங்க தேசத்தில் துன்புறுத்தப்படும் ஹிந்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசியுள்ளார். ‘வங்க தேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் இனப்படுகொலைகள், அவர்கள் சொத்துக்கள் அழிப்பு, கோயில்கள் இடிப்பு, சூறையாடல் போன்றவை வருத்தமளிக்கின்றன. பங்களாதேஷில் ஹிந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரை முஸ்லிம்கள் துன்புறுத்துவது சுதந்திரத்திற்கு பிறகும் தொடர்கிறது. இஸ்லாமிய பயங்கரவாத சித்தாந்தத்தை தோற்கடிப்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்க வேண்டும்’ என்றும் கபார்ட் வலியுறுத்தினார்.