இந்திய ரயில்வே 2020-21 காலகட்டத்தில், ஒரே ஆண்டில் ஆறாயிரம் கிலோமீட்டருக்கு மேல் ரயில் பாதைகளை மின்மயமாக்கியுள்ளது. இது முந்தைய 2018-19 காலத்தில் செய்த உயர்ந்த சாதனையான ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிலோமீட்டரை விஞ்சிய புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. இந்த ரயில்வே மின்மயமாக்கலில், ஜபல்பூர் வழியாக மும்பை-ஹவுரா, டெல்லி-தர்பங்கா-ஜெயநகர் மற்றும் சென்னை-திருச்சி போன்ற சில முக்கிய வழித்தடங்களும் அடங்கும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2007 முதல் 2014 வரையிலான ஏழு வருடங்களுடன் ஒப்பிடும்போது இது ஐந்து மடங்கு அதிக சாதனை அளவு என்பது குறிப்பிடத்தக்கது. 2023 டிசம்பருக்குள் ரயில்வே தனது அனைத்து தடங்களையும் முழுமையாக மின்மயமாக்க திட்டமிட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்வே மின்மயமாக்கல், மத்திய அரசு நிர்ணயித்துள்ள, 2030ம் ஆண்டில் ‘நிகர பூஜ்ஜியம்’ கார்பன் உமிழ்வு என்ற குறிக்கோளில் பெரும் பங்கு வகிக்கும்.