லண்டனைச் சேர்ந்த பத்திரிகை ஆய்வாளர்களான, டானிஷ் மற்றும் ருஹி கான் ‘எஸ்கேப்டு – ட்ரூ ஸ்டோரீஸ் ஆப் இந்தியன் பியுஜிட்டிவ்ஸ் இன் லண்டன்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இதில், கடந்த, 70 ஆண்டுகளில், கொலை, வங்கி மோசடி என பல குற்றங்களில் ஈடுபட்டு, பாரதத்தில் இருந்து பிரிட்டன் தப்பிச்சென்ற பல்வேறு குற்றவாளிகளில், தேர்ந்தெடுத்த 12 பேரை குறித்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதில், முன்னாள் கடற்படை அதிகாரி ரவி சங்கரன், இசைக்கலைஞர் நதீம் சைபி, நிழல் உலக தாதா இக்பால் மிர்ச்சி, விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரின் குற்றங்கள், நாடு கடத்தல் வழக்குகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.