அரபு எழுச்சி 2010ல் வந்ததே நினைவிருக்கிறதா? இது மூன்று ஆண்டுக் காலம் 18 அரபு நாடுகளைக் காட்டுத்தீபோல் சூழ்ந்து மூழ்கடித்தது. விவகாரம் துனிசியாவில் தொடங்கியது… ஒரு தள்ளுவண்டி வியாபாரி காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்து, மக்கள் கூடியிருந்து பார்க்கும்போதே தீக்குளித்தார். துனிசியாவின் சர்வாதிகார, ஊழல் தலைமையை ஒரு நபர் தைரியமாக மீறுவது ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள்மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. லிபியா, எகிப்து, சிரியா உள்ளிட்ட ஒரு டஜன் அரபு நாடுகளுள் பரவிவிட்ட இந்தப் புரட்சிப் போராட்டத்தை ‘ட்விட்டர் புரட்சி’ என சில ஆய்வாளர்கள் விவரிக்க ஆரம்பித்தனர்.
உக்ரைனில் சிறுமிமீது நடந்த பாலியல் பலாத்காரம், ஜனாதிபதி யானுகோவிச் தலைமையிலான சக்திவாய்ந்த ஆளும் லாபிக்கு எதிராக ஒரு பெரிய மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கோமாவில் கவலைக்கிடமாக இருந்த தனது மகளின் கோரமான வீடியோவை வலைத் தளத்தில் பதிவேற்றியதால் கிளர்ச்சி பற்றிக் கொண்டது.
பாரத அரசு இந்த அடங்காத டிஜிட்டல் பெரியண்ணன்களைக் கட்டுப்படுத்த முயல் கிறது. பல ஜனநாயக நாடுகளைப்போலவே, புவியியல் எல்லைகளையும் தேசியச் சட்டங்களையும் அங்கீகரிக்க மறுக்கும் இந்தப் பெரியண்ணன்கள் முன்வைக்கும் புதிய டிஜிட்டல் சவாலை சமாளிக்க சரியான சட்டக் கட்டமைப்பு தேவைப்பட்டது. இந்த ட்விட்டரையும் பேஸ்புக்கையும் ஒருகை பார்த்த அரசு எனில் ஆஸ்திரேலிய அரசைச் சொல்ல வேண்டும். பத்தி ரிகைகள் பெருஞ்செலவு செய்து செய்தி வெளியி டுகின்றன.
அவற்றை இந்த டிஜிட்டல் பெரியண் ணன்கள் இரண்டு கைகளாலும் அள்ளிப் பரப்பி காசு பார்க்கின்றன. அவற்றுக்குக் கிடைத்தது அவல் என்றால் பத்திரிகைகளுக்குக் கிடைத்தது உமி. ‘மரியாதையாக 15 நாட்களுக்குள் பத்திரிகைகளுக்கு என்ன இழப்பீடு கொடுக்கப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானம் செய்யுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் வெளியேறலாம்’ என்று அதிரடியாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது. அற்பத்தனமாக இரண்டு டிஜிட்டல் பெரியண்ணன்களும் முறைத்தன. பிறகு வாலைச் சுருட்டிக் கொண்டன. இல்லாவிட்டால், ஆஸ்திரேலியாவில் கடையை மூடவேண்டியிருக்குமே! இந்த வெற்றி யை அடுத்து, டிஜிட்டல் முரட்டுக் காளைகளுக்கு மூக்கணாங்கயிறு போடு வதற்காக ஆஸ்தி ரேலியா பாரதத்திலும் கனடாவிலும் பக்கபலம் தேடுகிறது.
இந்த டிஜிட்டல் பெரிசுகளால் பாரதம் அனுபவிக்கும் தலைவலியே வேறு. பாரதத்தில் ஹிந்துக்களின் மனது புண்படும்படி காட்சிகளையும் கருத்துகளையும் ட்விட்டர் – முகநூல் – – ஓ.டி.டி தளங்கள் மானாவாரியாகப் பரப்பி சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்து கின்றன. கேட்டால், ”எங்களுக்கு சுதந்திரம் உண்டு. எங்களைக் கட்டுப்படுத்த சட்டம் இல்லை” என்று சவடால் அடித்தன. பாரத அரசு அந்தக் குறையை நீக்கிவிட்டது. டிஜிட்டல் விவகாரங்களில் கட்டுப்பாடு கொண்டுவருவதற்காக நெறிமுறைத் தொகுப்பு ஒன்றை சென்ற வாரம் வெளியிட்டது.
இந்தச் சட்டத்தின்படி, இணையதளக் குற்றங்களை விசாரிக்கும்போது ட்விட்டர் – – முகநூல் போன்ற பெரிய கைகள் அரசுக்கு ஒத்துழைப்புத் தந்தே ஆக வேண்டும். கைமேல் பலன் என்பார்களே, அதுபோல, அமேசான் பிரைம் பாரத அரசின் காலில் விழாத குறையாக மன்னிப்புக் கேட்டிருக்கிறது. அது பரப்பிய ‘தாண்டவ்’ என்ற வெப் சீரீஸ் கக்கிய ஹிந்து விரோத விஷத்தை கத்தரித்து அப்புறப்படுத்தியது. அமெரிக்கப் பெருநிறுவனங்களான ட்விட்டர் – – முகநூல் வகையறாக்களைத் தலையில் தட்டிவைப்பதுடன், ‘ஆத்ம நிர்பர்’ பாதையில் சென்று பாரதத்தை இணையதள ஆதிக்கத்துக்கு உயர்த்தும் நோக்கத்துடன் சுதேசி நிறுவனங்களைக் கறாராக ஊக்குவித்து வருகிறது. Koo, Mitron, Roposo, MS Takatak, Sandesh போன்ற சுதேசி டிஜிட்டல் தம்பிகள் களம் இறங்கியிருக்கிறார்கள்.
இவர்கள் மேற்படி பெரியண்ணன்களை நெம்பித் தள்ளி, நடுநாயகமாகிட வேண்டும் என்னும் எண்ண த்துடன் நாட்டு மக்கள் இவர்களுக்கு அபார வரவேற்பு அளித்து ஊக்குவிப்பது நல்ல சேதி. இந்த டிஜிட்டல் பெரியண்ணன்கள், ’பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, ஆபாசத் தகவல்களைப் பரப்புவது, தேசத்தின் கலாச்சாரத்தைத் துச்சமாக மதிப்பது, பொருளாதாரக் கோல்மால்களுக்குத் துணை போவது போன்ற வேலைகள் எங்கள் டிஜிட்டல் தளங்கள் வழியாக நடக்க அனு மதிப்போம், என்ன செய்வீர்கள்?’ எனப்பாரத அரசை முறைக்குமானால், இவற்றுக்குத் தேவைப்படுகிற மருந்தே தனி. மூக் கணாங்கயிறு போட்டது போதாது, சாட்டையைக் கையில் எடுக்க வேண்டியதுதான்.
(பாஜக பிரமுகர் ராம் மாதவ், விமர்சகர் ஸ்ரீதத்தன் கட்டுரைகளிலிருந்து; நன்றி: ஆர்கனைசர்)
தமிழில் : சரவணபிரசாத் பாலசுப்ரமணியம்