பாரத அரசு செய்துவரும் விவசாயம், தேச முன்னேற்ற செயல்களுக்கு ஆதரவாக, உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் உள்ள கீமானந்த் என்ற விவசாயி ஒருவர் எழுதியுள்ள கடிதத்திற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, ‘பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் வெற்றிகரமான ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. வானிலை நிச்சயமற்ற தன்மைகளுடன் தொடர்புடைய ஆபத்தை குறைப்பதால், விவசாயிகளின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தின் பலன்களை இன்று கோடிக்கணக்கான விவசாயிகள் அனுபவிக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் விரிவான பாதுகாப்பு மற்றும் வெளிப்படையான உரிமைகோரல் தீர்வுகள் மூலம் இந்த திட்டம், விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. விதைப்பது முதல் சந்தை வரை விவசாயிகள் சந்திக்கும் அனைத்து சிரமங்களையும் நீக்குவதற்கும், அவர்களின் செழிப்பான வாழ்க்கை மற்றும் விவசாய முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொள்கிறது. இன்று தேசம், ஒரு வலுவான, வளமான மற்றும் தன்னம்பிக்கையுடன், ஒருங்கிணைந்த வளர்ச்சி, தொலைநோக்கு பார்வையுடன் வேகமாக முன்னேறுகிறது. வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்கும், நாட்டை வளர்ச்சியின் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கும் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து, உங்களது மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற ஊக்கம் தரும் செய்திகள் நாட்டின் சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள எங்களுக்கு புதிய ஆற்றலைத் தருகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.