சிவசேனா காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில், கடந்த 2007ல் பஜாஜ் நிறுவனத்திற்கு 200 ஏக்கர் நிலம் அரசால் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் 2020 வரை அந்த நிலத்தில் எந்த வேலையும் செய்யவில்லை. முந்தைய பா.ஜ.க அரசு ஆட்சியில் இந்த தாமதத்திற்கு 143 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே இதற்காக ஒரு கூட்டத்தை நடத்தி அந்த அபராதத் தொகையை வெறும் 25 கோடியாகக் குறைத்துவிட்டார். ‘சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி கட்சிகள், மோடி தலைமையிலான மத்திய அரசு அம்பானி மற்றும் அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதாக ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள்தான் தற்போது பஜாஜ் போன்ற நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்துக் கொள்கின்றனர்’ என பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது.