இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் சாமானியர்கள். அசாதாரணமான தொண்டுகள் செத இவர்களை தேடிப்பிடித்து ஆராந்து விருது கொடுத்து கௌரவித்துள்ளது பாரத அரசு. அவர்களில் சிலரை உங்களுக்கு அறிமுகம் செது வைப்பதில் பெருமை கொள்கிறோம்
சுநீதி சாலமன்:
சென்னையை சேர்ந்த மருத்துவரான சுநீதி சாலமன், 1986ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் பேராசிரியராக பணியாற்றிய போது இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதை முதன்முதலில் கண்டறிந்தார்.பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க மருத்துவமனைகள் மறுத்து வந்த அந்த காலகட்டத்தில், எய்ட்ஸ் நோயாளிகளுக்கான இந்தியாவின் முதல் தன்னார்வ ஆலோசனை, சோதனை மையத்தை சென்னை மருத்துவக் கல்லூரியில் 1993இல் நிறுவினார். அதே ஆண்டு தன் தந்தையின் பெயரால் ஒய்.ஜி.கேர் (ஙுஎ இஅகீஉ) என்ற அரசு சாரா தொண்டு அமைப்பை உருவாக்கி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார். ஆண்டுதோறும் பல ஆயிரம் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். எய்ட்ஸ் நோயாளிகளின் நல்வாழ்வுக்காக பல தொண்டுகள் புரிந்த சுநீதி சாலமன் 2015ல் புற்றுநோயால் காலமானார்.
தாரிபள்ளி ராமையா
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளி கிராமத்தை சேர்ந்தவர் தாரிபாளி ராமையா. இவர் இதுவரை சுமார் பத்து லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். தன் மிதிவண்டி முழுவதும் விதைகளையும் மரக்கன்றுகள் நிறைத்து, போகும் வழிகளில் காணும் பொட்டல் இடங்களில் மரகன்றுகள் நட்டு, விதைகளை விதைப்பதே அவர் வழக்கம். மனிதனின் எதிர்கால நல்வாழ்வுக்கான தீர்வு இந்த விதைகளில் இருப்பதாக ராமையா நம்புகிறார். பள்ளிக்கூடம் செல்லாத ராமையா தன் சொந்த முயற்சியில் பல புத்தகங்களை படித்து, இன்று ஒரு நடமாடும் கலைக்களஞ்சியமாக திகழ்கிறார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின், ‘ஹரிதா ஹரம்’ என்ற பசுமைத் திட்டதிற்கு ராமையாவின் ஒத்துழைப்பை நாடியுள்ளார்.
டாக்டர் பக்தி யாதவ்
91 வயது மகப்பேறு மருத்துவரான பக்தி யாதவ், மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்தவர். இந்தூரின் முதல் பெண் மருத்துவரான இவர் கடந்த 68 ஆண்டுகள் இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார். ஆயிரம் பிரசவங்களுக்கு மேல் பார்த்த இவர் இன்று தள்ளாத வயதிலும் தன்னால் இயன்ற சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இவரது கணவரான டாக்டர் சந்திர சிங் யாதவ் ஏழைகளுக்கு சேவை செய்வதே தன் கடமை எனக் கருதியதால் தானும் கணவரின் வழியில் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். நாடு முழுவதிலும் இருந்து பலர் இவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோயாளிகளை தன் குடும்பத்தில் ஒருவராக பாவித்து அன்போடு சிகிச்சை அளிக்கும் இவரது பண்புதான் இவர் அளிக்கும் உன்னத மருந்து.
ஹகீம் முகமது அப்துல் வஹீத்
ஹைதராபாத், நிஜாமியா அரசு மருத்துவ கல்லூரியில் பணிபுரிபவரும் யுனானி மருத்துவம் மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னால் தலைவருமான ஹகீம், இந்தியா, அயல்நாடுகளை சேர்ந்த சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வெண்சரும நோயால் (ஙடிணாடிடூடிஞ்ணி) பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இந்த நோயாளிகளுக்கு ஏற்படும் சமூக சிக்கல்களை தீர்த்து வைக்க பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பல்வேறு மருத்துவ நிறுவனங்களில் நீரிழிவு, ரத்தகொதிப்பு, வெண்சரும நோய், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கான யுனானி மருத்துவம் சார்ந்த ஆய்வுகளில் பங்கெடுத்து வருகிறார்.
கரீமுல் ஹக்
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கரீம் (50), தன் தாயார் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்ததை அடுத்து தன் பகுதி மக்களின் மருத்துவ தேவைக்காக தன் இருசக்கர வாகனத்தையே ஆம்புலன்ஸாக கடந்த 14 வருடங்களாக பயன்படுத்தி வருகிறார். இவரது உதவியால் பல மக்கள் சரியான நேரத்தில் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனை சென்று சிகிச்சை பெற முடிகிறது. இந்த சேவைக்கு அவர் எந்த பணமும் பெறுவதில்லை. இதுவரை 3,000 பிணியாளர்களுக்கு உதவி புரிந்த கரீம் தான் சுற்று வட்டாரத்தில் உள்ள 20 கிராமத்திற்கும் ஒரே நம்பிக்கை. இவரது சேவைக்கு உதவியாக பஜாஜ் நிறுவனம் பிரத்யேக இரு சக்கர ஆம்புலன்ஸ் ஒன்றை பரிசளித்துள்ளது.