பிரான்ஸில் சில மாதங்களுக்கு முன், ‘சாமுவேல் பெட்டி’ என்ற ஒரு வரலாற்று ஆசிரியர், முகமது நபியின் சர்ச்சைக்குறிய கேலி சித்திரத்தை காட்டினார் என்பதால் ஒரு முஸ்லிம் பயங்கரவாதி அவரது தலையை துண்டித்துக் கொன்றார். அதனைத் தொடர்ந்து பிரான்ஸில் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், தீ வைப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன. துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள், பிரான்ஸுக்கு எதிராக பேசின. பிரான்ஸ் அரசு, சமீபத்தில் மத பயங்கரவாத தடுப்புச் சட்டம் இயற்றியது. இது போன்ற பல நிகழ்வுகளுக்கும், 13 வயதான ஒரு சிறுமி கூறிய ஒரே ஒரு பொய்தான் காரணமாக அமைந்துள்ளது என்பது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வகுப்பின் செய்தித் தொடர்பாளராக இருக்க சக மாணவர்கள் அந்த பெண்ணை கேட்டுக்கொண்டனர். இதனால் தன் தந்தையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்த சிறுமி ’முகமது நபியின் கேலிச்சித்திரத்தை ஆசிரியர் காட்டப்போவதாகவும், முஸ்லிம் மாணவர்கள் வெளியேறுபடியும் சாமுவேல் பெட்டி கேட்டுக் கொண்டார்’’ என தன் தந்தையிடம் ஒரு பொய்யை கூறியுள்ளார். இந்த சிறிய பொய்யே சமீபத்தில் உலக அளவில் நிகழ்ந்த இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைந்துவிட்டது.