உத்தரப்பிரதேசத்தில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், தேசிய திறந்தநிலைப் பள்ளிகளில் (NIOS) பாரதப் பாரம்பரிய படிப்புக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டார். இதில் யோகா, வேதம், அறிவியல், தொழில் திறன் போன்ற படிப்புகள் சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களை உள்ளடக்கி 15 பாடதிட்டங்களை NIOS தயாரித்துள்ளது. இந்த பாடத்திட்டங்கள் அனைத்தும் 3, 5, 8ம் வகுப்புப் பாடத்திட்டங்களுக்குச் சமம். இதில் குருகுலம், மதரசா பள்ளி மாணவர்களும் இந்த புதிய பாடத்திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். இவை அனைத்தும் விருப்பப்பாடங்கள் மட்டுமே. மதரசா மாணவர்களுக்கு இந்த பாடங்களைக் கற்க எந்த கட்டாயமும் இல்லை. மதரசாக்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர்களும் பாரம்பரிய பாடத்திட்டத்தைக் கற்க ஆர்வம் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக இதில் 100 மதரசாக்களும் பின்னர் 500 மதரசாக்களும் இணைக்கப்படும். ஆனால் இந்த செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பல ஊடகங்கள் திரித்து, ஹிந்துக்களின் ராமாயணம் மகாபாரதம், கீதை போன்றவற்றை மதரசா மாணவர்களுக்குக் கற்பிக்கக் கட்டாயப்படுத்துவதாக செய்தி வெளியிட்டு குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கின்றன.