சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில், கமலின் மய்யம் பதிப்பகத்துக்கு அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கமல்ஹாசன் நற்பணி இயக்கமும், மக்கள் நீதி மய்யமும் செய்த பணிகளின் புகைப்படங்களின் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. கமல் பரிந்துரைக்கும் நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடுகளை விளக்குவதற்காக அரங்கில் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை புத்தகக் காட்சிக்கு லட்சக்கணக்கானோர் வரும் சூழலில், அரசியலுக்கு அப்பாற்பட்டு புத்தக வாசிப்பை மையப்படுத்தி நடந்து வரும் புத்தகக் கண்காட்சி, தேர்தலுக்காக, பிரச்சாரமேடையாக பயன்படுத்தப்படுவதால் இது புத்தக வாசிப்பாளர்கள், அரசியல் கட்சிகளிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.