இணைவோம் அணிலாக

 படுத்த படுக்கையாக இருந்தும்கூட என் கைங்கர்யமும் ஸ்ரீராமர் ஆலயத்தில் இருக்க வேண்டும் என அழைத்து பணம் கொடுத்தார் மனோகர்.

நம்ம வீட்டு குழந்தைகளுக்கும் இப்படிப்பட்ட நல்ல பழக்கங்களை கற்றுத்தருவோம் என நம்மை எண்ண வைக்கும் வகையில், ராமஜென்மபூமிக்கு தங்கள் சேமிப்பை தருகின்ற சிறுவர் சிறுமியர்.

குஜராத், சூரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி பாவிகா, ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் கட்டிடப் பணிக்காக ரூ. 50 லட்சம் நிதி சேகரித்துள்ளார். இவர் ஒரு பாடகி. ராமாயணத்தை தனது இனிய குரலில் பாடி பக்தர்களிடம் இருந்து இந்த நிதியை திரட்டியுள்ளார்.

திருச்சியில், பாரதிய சிக்ஷண‌ மண்டல் பொறுப்பாளர்கள் ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சமர்ப்பணத் தொகையை வழங்கினர்.

கோபியில் இருந்து, 1990ம் வருட கரசேவையில் பங்கேற்ற ஶ்ரீ மாதேஸ்வரசாமி குடும்பத்தினர் ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலுக்கு நிதி சமர்ப்பணம் செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போது ஒரு குழந்தை வேகமாக ஓடிவந்து, ராமருக்காக தன்னுடைய பங்களிப்பை வழங்கி பெயரை பதிவு செய்துக்கொண்டது.