ஹிந்துக்கள் புனிதமாக போற்றும் ராமாயணத்தில், சீதாதேவியை பகவான் ஸ்ரீராமர் தன் வானர சேனையின் உதவியோடு கட்டியது ராமசேது. எனவே தனுஷ்கோடி, சேதுக்கரை, ராமசேது அனைத்தும் வரலாற்று ரீதியாக மட்டுமில்லாமல் மத ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ராமசேது பாலத்தை தேசிய புனிதச் சின்னமாக அறிவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அழகப்பா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும் திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான ராமசாமி என்பவர், ‘ஹிந்துக்கள் புனிதமாக கருதும் ராமசேது பாலத்தை புனிதச் சின்னமாக அறிவிக்கக் கூடாது’ என வழக்கைத் தொடர்ந்துள்ளார். இதற்கு ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சியையும் மேற்கோள் காட்டியுள்ளார். ஏற்கனவே, ராமசேது பாலத்தை சிதைத்து கால்வாய் அமைக்க கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் முடிவு செய்யப்பட்டபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. அதை எதிர்த்து பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.