மாநிலத்தில் வருமானவரி எய்ப்பு, நல்லூர் வயல் ஊர் பெயர் மாற்றம், அங்குள்ள அரசு அலுவலகங்கள் பெயர் மாற்றம், நில அபகரிப்பு, குஜராத் வனத்துறையின் முத்திரையை சட்டவிரோதமாக பயன்படுத்தியது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கிய கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனின் குடும்ப நிறுவனமான காருண்யா, தற்போது மேலும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. தன்னுடைய சீஷா அமைப்பு மூலமாக கோவையில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் மதமாற்றத்திற்காக பரிசு பொருட்களை கொண்டு சென்று கொடுத்துள்ளனர். இவைகளை அவசர சேவைக்காக பயன்படுத்த வேண்டிய ஆம்புலன்சில் கொண்டு சென்றுள்ளனர். மேலும், அரசு நிதியில் கட்டப்பட்ட பசுமை வீடுகளில் ‘சீஷா’ அமைப்பு, ‘பால் தினகரன்’ பெயர்களைப் பொறித்த கல்வெட்டை வைத்து, சீஷா அமைப்பின் உதவியில் கட்டப்பட்ட வீடுகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். இதை பால் தினகரனின் பிறந்த நாள் அன்று திறக்க முற்பட்ட நிலையில், கிராம மக்களின் கடும் எதிர்ப்பால் இம்முயற்சி கைவிடப்பட்டுள்ளது.