ஆத்திரமூட்டும் செய்தியை பரப்பியவர் கைது

பிஜினோர் பகுதியில் ஜாட் இளைஞரான ராஷித் முஸ்லீம் இளைஞர்களால் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளில் நான்கு பேரை காவல்துறை கைது செய்தது. ஒருவர் மட்டும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றார். இந்த கொலை சம்பந்தமான செய்திகளை சமூக வலைத்தளத்தில் ஆத்திரமூட்டும் வகையில் பரப்பியதற்காக முகமத் நாஜிம் என்னும் இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது. நாஜிம் தனது வலைத்தளத்தில், “எந்த நகரமாக இருந்தாலும் ஆட்சி எங்களுடையதாக இருக்கும்,” என்று குறிப்பிடும் வகையில் செய்தியைப் பரப்பியிருந்தான். மேலும் இது தொடர்பாகக் குற்றவாளிகள் மேல்  RASUKA சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.