சர்வதேச கருத்தரங்கு ஒப்புதல்

சமீப காலமாக பாரதத்திற்கு எதிரான கருத்துகள் ஆன்லைன் விவாதங்கள், கருத்தரங்கு எனும் பெயரில் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் முயற்சியாக, அரசு, அரசு நிதியுதவி பெற்ற பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அனைவரும் பாரதத்தை மையமாகக் கொண்ட, குறிப்பாக பாரதம் குறித்த உள் விவகரங்கள் சம்பந்தமான மெய்நிகர் சர்வதேச கருத்தரங்குகளை நடத்துவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் முன்கூட்டியே தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்குகளில் பங்கேற்கும் அனைவரின் பெயர் விவரங்களையும் அரசாங்கத்திடம் கூறி முன்கூட்டியே அங்கீகரிக்க வேண்டும் என மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.