உத்தரபிரதேசம், அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ், அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்க, மூன்றரை ஆண்டுகள் ஆகும். 70 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் முழுவதையும் கட்டி முடிக்க ரூ. 1,100 கோடி ரூபாய் செலவாகும். சில நிறுவனங்கள், ‘திட்டத்தை எங்களிடம் ஒப்படையுங்கள், கோயிலை இலவசமாக கட்டித் தருகிறோம்’ என்றனர். ஆனால், அதை நாங்கள் ஏற்கவில்லை. நம் தேசத்து மக்கள் அனைவரின் பங்களிப்புடன் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதற்காக, ஆறு லட்சம் கிராமங்களில், 15 கோடிக்கும் அதிகமான வீடுகளை தொடர்பு கொண்டு, ராமர் கோயிலுக்கான நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறினார்.