கேரளாவில் கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் புகாரில் சிக்கியவர் பிராங்கோ மூலக்கல். 2021-ம் ஆண்டுக்கான நாள்காட்டியில் இவரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து கேரள கத்தோலிக்க சீர்திருத்த இயக்கத்தினர் அந்த நாள்காட்டிகளை தீயிட்டு எரித்தனர்.
கேரளாவில் சில கிறிஸ்தவ தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பாவமன்னிப்பு கேட்டவர்களிடம், பாதிரியார்கள் பணம் கேட்டு மிரட்டுவது, பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது இதை தடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேத்யூ டி மட்காச்சன், பி.ஜே ஷாஜ் வி.ஜே ஜோஸ் உள்ளிட்டோர் மனு செய்திருந்தனர்.
இதனை அடுத்து உச்ச நீதிமன்றம், கேரள அரசுக்கும் அங்குள்ள 11 மலங்காரா சிரியன் சர்ச்சுகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனை அடுத்து உச்ச நீதிமன்றம், கேரள அரசுக்கும் அங்குள்ள 11 மலங்காரா சிரியன் சர்ச்சுகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.