கொரோனா குறித்த உண்மை தகவலை வெளியிட்டார். அரசு கொரோனாவை கையாண்டதை வெட்ட வெளிச்சமாக்கினார். வெளிநாட்டு ஊடகங்களில் பேட்டி போன்ற காரணங்களுக்காக பத்திரிகையாளர் ஒருவரை அரசு கைது செய்தது. ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதித்தது. இது நடந்தது வேறு எங்கோ அல்ல, கம்யூனிச கொடுங்கோலாட்சி நடக்கும் சீனாவில்தான். சீனாவில் கடைபிடிக்கப்படும் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை இதுதான். கைது செய்யப்பட்டவர் பெண் பத்திரிகையாளரும் வழக்கறிஞருமான ஜாங் ஜான். இவர் மட்டுமல்ல, சென் குயிஷி, லி ஜெஹுவ போன்ற பல பத்திரிகையாளர்களையும் இந்த வருடம் கைது செய்து பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டியுள்ளது சீன அரசு!
தனி மனித சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், மத சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் இங்குள்ள இடதுசாரிகள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?