கடந்த சில வாரத்திற்கு முன்பு திருச்சி துறையூர் அருகே மாராடியில் பாலர் ஸ்வயம்சேவக சிறுவர்கள் விளையாடும் போது அங்கு இருந்த பாழடைந்து போயிருந்த தேசிகர் கோவிலை சுத்தம் செய்து. பூஜை செய்தனர், அதனை நாம் விஜயபாரதத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
பின்னர் அக் 2 மாகா சேவா தினத்தில் அங்கிருந்த ஸ்வயம் சேவகர்கள் அந்த கோவிலை சுத்தம் செய்தனர். தற்போது அந்த கோவில் சன்னதி முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு தயாராக வருகிறது.
தங்களுடைய பகுதியில் உள்ள பாழடைந்த கோவிலை அங்கு உள்ள மக்களே முன் வந்து சுத்தம் செய்து பக்தர்கள் வழிபாட்டுக்கு கொண்டு வந்தால் பாழடைந்த கோவிலே எங்கும் இருக்காது என்பது நிதர்சனம். ஹிந்து சமுதாயம் மாராடி பாலார் ஸ்வயம்சேவக சிறுவர்களை நாம் ஒரு முன் மாதிரியாக கொள்ள வேண்டும் என்பது திண்ணம்.