பாரத சீன எல்லை பிரச்சனை குறித்த பேச்சு வார்த்தையில் எல்லையில் அமைதி காக்கவும், பிரச்சனைகளை தவிர்க்கவும் ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சு வார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
சீனர்களை முதலில் பின்வாங்க பாரதம் அறிவுறுத்தியுள்ளது. ஐ.நா சபை 75வது ஆண்டு விழாவில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் ‘எந்த ஒரு நாட்டுடனும் சண்டையிடும் எண்ணம் இல்லை.
பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்போம்’ என்றார். பாரத ராணுவத்தின் பராக்கிரமம், அரசின் வெளியுறவு கொள்கை, உள்துறை செயல்பாடு, தலைவர்களின் தேசப்பற்று இவைகளுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றே இதை கூறலாம்.
கம்யூனிச சீனாவை எக்காலத்திலும் நம்பமுடியாது என்பது அதன் முந்தைய நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.