விஎச்பி சார்பில் அயோத்தி ராமர் கோவில் அடிகல் நாட்டு விழாவுக்கு திருச்சி காவிரியில் இருந்து அனுப்பப்பட்டது

வருகின்ற ஆகஸ்ட் 5 அன்று அயோத்தியில் ஸ்ரீராமன் ஆலயம் அடிக்கல் நாட்டுவதற்காக, இந்தியாவில் உள்ள புனித நதி மற்றும் அதனுடைய மண்ணை பூமி பூஜைக்கு அனுப்பி வருகின்றனர். அதன் அடிப்டையில் திருச்சிராப்பள்ளியில் இருந்து காவிரி மண், கொள்ளிடம் மண் மற்றும் ஸ்ரீ ராமரின் குல தெய்வமான ஸ்ரீ ரங்கநாதரின் பிரசாதம் தென் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத், சார்பாக திருச்சியில் VHP மாநில அலுவலகத்தில் இருந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் VHP தமிழ்நாடு கேரளா பாண்டிச்சேரி அமைப்புச் செயலாளர் ஸ்ரீ PM நாகராஜன், தென்தமிழக அமைப்புச் செயலாளர், ஸ்ரீ சேதுராமன், பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் ஸ்ரீ பாரத், ஆர்எஸ்எஸ் திருச்சி கோட்ட தலைவர் ஸ்ரீ செல்லதுரை, திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீ சசிகுமார், ஸ்ரீரங்கம் பகுதி தலைவர் ஸ்ரீ கோபாலன் ஆகியோர் மற்றும் VHP பொறுப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி மண்ணெடுத்து, ஸ்ரீரங்கம் ஆலயத்தில் பூஜை செய்து, ஸ்ரீரங்கம் ஆலயத்தை வலம் வந்து அனுப்பி வைத்தனர்.

 

 

காவிரி மண், கொள்ளிடம் மண், ஸ்ரீரங்கநாதரின் பிரசாதம்

காவிரி நதி கரையில்

ஸ்ரீரங்கநாதர் கோவிலை சுற்றி வரும் போது