கன்யாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா நினைவுச் சின்னத்தை அமைத்தவர் ஏக்நாத் ரானடே. அவர் படித்த ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் வாரம் ஒருநாள் பைபிள் வகுப்பு நடைபெறுவது வழக்கம்.
ஒருநாள் பைபிள் வகுப்பில் பேராசிரியர் பிலிப் ஹிந்து மதம் பற்றி கிண்டலும் கேலியுமாக விமர்சனம் செய்தார். அப்போது ஏக்நாத் ரானடே எழுந்து நின்று, ஹிந்து மதத்தின் சிறப்பியல்புகளை அருமையாக எடுத்துரைத்தார். அன்று பைபிள் வகுப்பு ஹிந்து சமய வகுப்பாக மாறியது. பேராசிரியருக்கோ அதிர்ச்சி. ஆனால் மாணவர்களுக்கோ மகிழ்ச்சி. பேராசிரியர் பிலிப் என்ன சொல்வதென்று தெரியாமல், ஏக்நாத்திடம், ரானடே! நீ பைபிள் வகுப்பிற்கு வர வேண்டுமென்பதில்லை. நீ வரவில்லை என்றாலும் வருகைப் பதிவேட்டில் நீ வந்ததாக பதிவுசெய்து விடுவேன்” என்றார்.
இல்லை… இல்லை. பைபிள் அப்படி என்னதான் சொல்கிறது என்பதை தெரிந்துகொள்ள நான் பைபிள் வகுப்பில் கலந்து கொள்வேன்” என்றார் ஏக்நாத் ரானடே.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்