கடவுளின் நாடு என அழைக்கப்படும் கேரளாவில் 30.1.2020ந் தேதி இந்தியாவில் முதல் கொரோனா
வைரஸ்சால் பாதிக்கப்பட்டார்கள் என்ற தகவல் வெளியாகியது மேற்படி .பாதிக்கப்பட்டவர்களின் பூர்வீகத்தை ஆய்வு செய்தால், நக்ஸல்வாதிகளின் மையமாக விளங்கிய காசர்கோடு, தற்போது கொரோனாவின் மையமாக மாறியுள்ளது. முதலில் மூன்று மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட மூவரும் சீனாவின் வூஹான் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்தவர்கள், இதில் ஒரு மாணவன் காசர்கோடு பகுதியை சார்ந்தவன். கேரளாவின் வடக்கு பகுதி தான் காசர்கோடு. இந்த மாவட்டம் நக்ஸல் கோட்டையாக வர்ணிக்கப்படும் . காசர்கோடு வளைகுடா நாடுகளுடன் நெருங்கிய இணைப்பில் உள்ளது பகுதி. மார்ச் மாதம் 27ந் தேதி கொரோனா வைரஸால் கேரளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39, இதில் 34 பேர்கள் காசர்கோடு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள். இதுவரை கேரளாவில் 295 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது, இதில் 136க்கும் மேற்பட்டவர்கள் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக தற்போது காசர்கோடு கொரோனா வைரஸ் கிளஸ்டராக உருவெடுத்துள்ளதாக கேரள ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். 37.24 சதவீதம் முஸ்லிம்களை கொண்ட மாவட்டம், காசர்கோடு நகரில் மட்டும் 44 சதவீத முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். காசர்கோடு இவ்வாறு மாறுவதற்குறிய காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். கேரளாவில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் , 40 சதவீதத்திற்கும் குறைவில்லாமல் வடக்கு கேரள மாவட்டத்தில் உள்ளார்கள். . உண்மையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 75 பேர்கள் துபாய் திரும்பியவர்கள், இது காசர்கோடு-துபாய்-காசராகோடு பயணச் சங்கிலியுடன் நேரடி மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத தொடர்பை வெளிப்படுத்துகிறது. காசர்கோட்டிலிருந்து துபாய்க்கு மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ளனர்,
நிச்சயமாக காசர்கோடுக்கு திரும்பி வருகிறார்கள். உண்மையில், துபாயில் உள்ள நைஃப் பகுதி மினி-காசர்கோட் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அங்கு சிறிய அளவிலான தொழிலதிபர்களாக பணிபுரிபவர்கள் காசராகோடு பூர்வீகவாசிகள் அதிக அளவில் உள்ளனர் ஏப்ரல் மாதம் 1ந்தேதி கேரளாவில் பாதிக்கப்பட்டவரகள்24 பேர்களில் 12 பேர்களும், 2ந்தேதி 21 பேர்கள் பாதிக்கப்பட்டதாகவும். அதில் 8 பேர்களும், 3ந் தேதி 9 பேர்கள் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 7 பேர்களும், காசர்கோடு பகுதியை சார்ந்தவர்கள் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 7 மற்றும் 10 ந்தேதி டெல்லியிலிருந்து திரும்பிய முஸ்லீம்கள் 80 பேர்கள் கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளார்கள். திரும்பி 150 பேர்கள் தலைமறைவாகி எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில், கேரளத்தில் கொரோனா வைரஸ் கம்யூனிஸ்ட் அரசின் நடவடிக்கையால் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது என சுய விளம்பரம் கொடுத்துள்ளார்கள். காசராகோட் மாவட்டத்தில் கொரோனா வைரஸை இறக்குமதி செய்ததாகத் கூறப்படும் பகுதி துபாயில் உள்ள நைஃப் பகுதி, இந்த பகுதியில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். கொரோனா மற்ற நாடுகளுக்கு பரவுகிறது. இதுவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. கேரளாவில் உள்ள பெரும்பாலோனேர் அரபு நாடுகளில் வேலையிருக்கிறார்கள். காசர்கோடு பகுதியைச்
சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர்கள் அரபு நாடுகளில் வேலை பார்க்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 15ந் தேதிக்கு
பின்னர் 8,000 பேர்கள் வளைகுடா நாடுகளிலிருந்து காசர் கோடு வந்துள்ளார்கள். இதில் 60 சதவீதமானவர்கள்
துபாயிலிருந்து வந்துள்ளார்கள். இது பற்றி கேரள மாநில வருவாய் துறை அமைச்சர் ஈ.சந்திரசேகரன் விடுத்துள்ள
செய்தியில், வளைகுடா நாடுகளிலிருந்து வந்தவர்கள் தாங்களகவே 3 அல்லது 4 வாரங்கள் தனிமையில் இருக்க
வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும் பலர் செவிமடுக்கவில்லை. இதன் காரணமாகவும் கொரோனா வைரஸ்
மற்றவர்களிடம் பரவியிருக்க வாய்ப்பிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.