தனியார் வங்கிகளுடன் சில அரசு வங்கிகளும்

ரிசர்வ் வங்கி அறிவித்த மூன்று மாத கால அவகாசத்தை பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, கனரா வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் ஏற்றுக்கொண்டன

வங்கிகளும், கடன் வழங்கும் நிறுவனங்களும் வட்டி, இ.எம்.ஐ போன்றவற்றிலிருந்து மூன்று மாத காலம் அவகாசம் வழங்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது.

ஊரடங்கு காரணமாக மக்களுக்கு வட்டி, இ.எம்.ஐ போன்றவற்றிலிருந்து மூன்று மாத காலம் அவகாசம் வழங்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. வங்கிகளிடம் இருந்து இதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லாதிருந்த நிலையில் இப்போது பல வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டது. தனிநபர் கடன், கல்விக் கடன், வாகன கடன் உள்ளிட்ட எல்லா கடன்களுக்கும் இது பொருந்தும். மேலும் இ.எம்.ஐ, கடன் அட்டை போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.

பாரத ஸ்டேட் வங்கி முதல் ஆளாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டது.பிற வங்கிகளின் பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டு கடன், வாகன கடன் உட்பட அனைத்துக் கடன்களின் இஎம்ஐ களுக்கும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது என்று அண்மையில் கனரா வங்கியோடு இணைக்கப்பட்ட சிண்டிகேட் வங்கி அறிவித்துள்ளது.
தவணை தொகைகளுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்குவதாக பஞ்சாப் சிந்த் வங்கி அறிவித்திருக்கிறது.
யூகோ வங்கியும் மூன்று மாத காலம் அவகாவம் வழங்கியுள்ளது.
இந்தியன் வங்கி தவணைகளுக்கும் வட்டிகளுக்கும் மூன்று மாதம் அவகாசம் வழங்கியிருந்தாலும் பிற விவரங்களை இன்னும் தெரிவிக்கவில்லை.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் தவணைகளுக்கு கால அவகாசம் வழங்கியிருக்கிறது. ஆனால் எல்லா கடன்களுக்கும் இது பொருந்துமா என்பது பற்றிய தகவல்களை அளிக்கவில்லை.
பஞ்சாப் தேசிய வங்கி எல்லா கடன்களுக்கும் மூன்று மாதம் அவகாசம் வழங்கியிருக்கிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் தவணைகளுக்கு கால அவகாசம் வழங்கியிருக்கிறது. ஆனால் எல்லா கடன்களுக்கும் இது பொருந்துமா என்பது பற்றிய தகவல்களை அளிக்கவில்லை.
ஐசிஐசிஐ வங்கி இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
கால அவகாசம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மேலும் விவரங்களுக்கு அந்தந்த வங்கிக் கிளைகளை அணுகவும் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்திருக்கிறது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவும் எல்லா கடன்களுக்கும் மூன்று மாதம் அவகாசம் வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
அலகாபாத் வங்கி கால அவகாசம் எதையும் அறிவிக்கவில்லை, ஆனால் புதிய கடன்கள் வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
ஐடிபிஐ வங்கி வாடிக்கையாளரின் விருப்பப்படி கால அவகாசம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஏற்கெனவே இருக்கும் தவணைகளில் பணம் செலுத்த விரும்புவோர் செலுத்தலாம் என்று தெரிவித்திருக்கிறது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி மூன்று மாத கால அவகாசம் வழங்கியிருக்கிறது.
எச்.டி.எஃப்.சி வங்கி, கோடக் மகிந்திரா வங்கி,யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, கர்னாடகா வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஃபெடரல் வங்கி, இண்டஸ் வங்கி, சௌத் இந்தியன் வங்கி போன்ற வங்கிகள் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.