கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு 15 மாதங்களே ஆட்சியில் நீடித்தது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து திடீரென ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்தாா்.
அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனா். இதனால் தனது அரசுக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டதை அடுத்து, முதல்வா் பதவியிலிருந்து கமல்நாத் ராஜிநாமா செய்தாா். முன்னதாக ராஜிநாமா செய்த 22 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்தனா்.
இதையடுத்து ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை பாஜகவுக்கு கிடைத்ததால், அக்கட்சி ஆட்சியமைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில், சிவராஜ் சிங் சௌஹான் பேரவை கட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டு மாநில ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் சிவராஜ் சிங் சௌஹானுக்கு ஆளுநா் லால்ஜி டாண்டன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.மாநில முதல்வராக பதவியேற்றுள்ளாா்.