டெல்லி கலவரத்தின்போது உளவுத்துறை அதிகாரி அங்கித் ஷர்மா கொலை வழக் கில் தேடப்பட்டு வந்த ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப் பட்ட கவுன்சிலர் தாஹிர் உசேன் கைது செய்யப்பட் டார். முன்னதாக, அவர் சரண டைவதாகக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதர வாளர்களுக்கும் இடையே வடகிழக்கு டெல்லியில் கடந்த மாதம் ஏற்பட்ட மோதல் கலவர மாக மாறியது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். கலவரத்தின்போது உளவுத் துறை அதிகாரி அங்கித் ஷர்மா (26) கொல்லப்பட்டார். கழிவுநீர் கால்வாயில் இருந்து அங்கித் ஷர்மாவின் உடல் மீட்கப் பட்டது. பிரேத பரிசோதனை யில் அவரது உடலெங்கும் பலமுறை கத்தியால் குத்தப் பட்டது தெரிந்தது. அவரது கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் தாஹிர் உசேன் காரணம் என்று அங்கித் ஷர்மா வின் குடும்பத்தார் குற்றம்சாட்டினர். போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்த நிலை யில், தாஹிர் உசேன் தலை மறைவானார். அவரது வீட்டில் போலீஸார் நடத்திய சோத னையில் ஆயுதங்கள், வெடி பொருட்கள் கைப்பற்றப் பட்டன. தாஹிர் உசேனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், டெல்லி கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் தாஹிர் உசேன் நேற்று ஆஜரானார். நீதி மன்றத்தில் சரணடைய விரும்புவதாக அவர் மனு தாக்கல் செய்தார். அவரது வழக்கறிஞர் முகேஷ் கலியா கூறுகையில், தாஹிர் உசேன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சம்பந்தப்பட்ட கர்கர்டூமா நீதிமன்றத்தில் அவர் சரணடைய வில்லை என்றும் அதற்கு பதிலாக பெருநகர நீதிமன்றத் தில் சரணடைய விரும்புவ தாகவும் தெரிவித்தார். இந்தக் காரணத்தை ஏற்க மறுத்த நீதிபதி விஷால் பூஜா, இம்மனு இந்த நீதிமன்ற வரம்புக்குள் வராது என்று கூறி மனுவை நிராகரித்தார். தாஹிர் உசேன் வந்த தகவல் அறிந்து ஏற்கெனவே அங்கு சென்ற போலீஸார் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.