குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை காங்., உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்க மாட்டோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போரை சமாதானப்படுத்துவோம். அண்டை நாடுகளான பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கக் கூடாது? அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒற்றுமையாக இருப்பது தான், இந்தியாவின் பெருமை. இவ்வாறு அவர் கூறினார்.