உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி வழங்கியது. அதே வேளையில், அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு ஏற்ற வகையில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலத்தை உத்தரப் பிரதேச அரசு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியின் சோஹவால் பகுதியிலுள்ள தானிபூர் என்ற கிராமத்தில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசு வழங்கியது.இந்த நிலத்தில் மசூதியுடன், மருத்துவமனையும், நூலகமும் கட்டப்படும் என சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.