9ஆம் வகுப்பு அரசு தமிழ்ப்பாடப்புத்தகத்தில் பெரியாரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் ஒரு உரைநடை பாடம் இடம் பெற்றுள்ளது. அதில் 213 ஆம் பக்கத்தின் கீழ் பகுதியில் தெரியுமா? என்ற கேள்வி குறிப்புடன் பெட்டி செய்தியில் 27-6-1970 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ ) தந்தை பெரியரைத் தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ் என பாராட்டி பட்டம் வழங்கி சிறப்பித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி பொய்யானது.
இது சம்மந்தமாக வழக்கறிஞர் பிரபாகரன் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக பள்ளி கல்வி துறைக்கு தகவல் கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ ) விருது வழங்கவில்லை, யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு தான் விருது வழங்கியது. இது ஐநா சபையால் உருவாக்கப்பட்ட அமைப்பு இல்லை இது ஒரு தனியார் அமைப்பு.
ஆனால் அரசு பாடத்திட்டத்தில் பொய்யானா தகவலை பதிவிட்டுள்ளது என்ற செய்தியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பொது தகவல் அலுவலர் ஒத்துக்கொண்டுள்ளார்.இத்தகவலை மின்னூலில் திருத்தும் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளனர். கூடவே திருத்திய பாடநூல் பக்கம், பாடநூல் செய்திக்கான விருது ஷீல்டு ஆதாரங்கள் மற்றும் அன்று வெளியான பத்திரிக்கை செய்தியும் இணைத்துள்ளனர்.
இதன் மூலமாக திக மற்றும் திமுக போன்ற கட்சிகள் தமிழ் மக்களை எப்படி ஏமாற்றி, பொய் பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்து அடிமை கூட்டமாக மாற்றி வைத்துள்ளது மட்டுமல்லாமல் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் பொய்யான செய்திகளை கொடுத்து எதிர்வரும் சமுதாயத்தை எப்படி அடிமைக் கூட்டமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மறத்தமிழனை மண்ணென்ணை தமிழனாக மாற்றி, அடுக்குப் பேச்சால் அதி தீவிரவாதத்திற்கு தள்ளி அரை நூற்றாண்டாய் !, சோறுக்கும், நூறுக்கும், பீருக்கும் தமிழ் சமூகத்தை கொடிபிடித்து,கோஷம் போட வைத்த திராவிட அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து ,,”புதிய பாரதம் படைத்திட ” அணிதிரள்வோம்.