பாரத அரசின் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ, தேஜஸ் விமானத்திற்காக மேம்படுத்தியுள்ள ஆன் போர்ட் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 500 மருத்துவ ஆக்சிஜன் பிளான்டுகளை அமைக்க உள்ளது. இந்த ஆக்சிஜன் பிளான்டுகள் ஒரு நாளைக்கு 195 சிலிண்டர்கள் வரை நிரம்பும் ஆற்றல் கொண்டது. டி.ஆர்.டி.ஓ இதற்கான தொழில்நுட்பத்தை பெங்களூருவில் உள்ள டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் மற்றும் கோவையில் உள்ள டிரைடண்ட் நுமாட்டிக்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டி.ஆர்.டி.ஓ அறிவியலாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.