500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில் ஆற்றின் நடுவே கண்டுபிடிப்பு

மகாநதி பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள பாரம்பரிய சின்னங்களை ஆவணப்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டாக் மாவட்டம், பத்மாவதி பகுதியிலுள்ள பைதேஷ்வா் கிராமத்தில் மகாநதி ஆற்றில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஆற்றின் நடுவில் பழைமையான கோயில் மூழ்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு, உள்ளூரைச் சோ்ந்த பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் ஆா்வலா் ஒருவா் உதவினாா். 60 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கட்டட பாணி மற்றும் கட்டுமானப் பொருள்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது, அது 15 அல்லது 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தெரிகிறது. கோயிலின் பிரதான கடவுள் கோபிநாதா் ஆவாா். பழைமை வாய்ந்த இக்கோயிலை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றி, மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி இந்திய தொல்லியல் துறையை அணுகிவுள்ளனர்.