சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக,
சபரிமலைக்குச் சென்ற 9 வயது சிறுமி கூறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிறுமி தனது கழுத்தில் ஒரு பலகையை தொங்கவிட்டுள்ளார். அதில், ‘இப்போது எனக்கு 9 வயது. எனக்கு 50 வயது ஆனதும் மீண்டும் கோவிலுக்கு வருவேன். அதுவரை காத்திருக்கிறேன்’ என்று அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த வாக்கியம் மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.
தனது தந்தை ஹரிகிருஷ்ணனுடன் ஒன்பது வயது ஹிருத்ய கிருஷ்ணா என்ற சிறுமி தற்போது சபரிமலை கோவிலுக்குச் சென்றுள்ளார், மேலும், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கோவிலின் மரபுப்படி, 50 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே நான் கோவிலுக்கு வர முடியும். சபரிமலை கோவிலின் கலாச்சாரம் மற்றும் மரபுகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பலகையை கழுத்தில் அணிந்துள்ளேன்’ என்று கூறினார்.