இலங்கையில் 1983ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணத்தின் பலாலிக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த 2009ம் ஆண்டு இந்தப் போர் முடிவடைந்த நிலையில், விமானத் தளத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றன.சர்வதேச அளவிலான விமான நிலையமாக உருவாக்கும் பணிகள் முடிவுற்றதை அடுத்து இன்று யாழ்ப்பாணத்தின் பலாலிக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது.
சென்னை மட்டுமின்றி மதுரை, கோவை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களில் இருந்தும் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை வழங்கப்பட உள்ளது. யாழ்ப்பாணம் இலங்கையின் 5-ஆவது சா்வதேச விமான நிலையம் ஆகும். ஏற்கெனவே கொழும்பு, ரத்மலானா, மட்டக்களப்பு, அம்பந்தோட்டம் ஆகிய இடங்களில் சா்வதேச விமான நிலையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது