30 கோடி ஊழல்

முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி அளித்த பேட்டியில், ‘பொங்கல் பரிசு தொகுப்பாக, பையுடன் 21 பொருட்கள் வழங்கப்படும் என்றது தி.மு.க. ஆனால், பல கார்டுதாரர்களுக்கு, 15, 16 பொருட்களே கிடைக்கின்றன. பையும் கிடைக்காது, வீட்டில் இருந்து பை எடுத்து வர, கடைகளில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வில், 2.5 டன் வெல்லம் உண்பதற்கு உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ளார். பொருட்கள் தரமற்றும் எடை குறைவாக உள்ளதாகவும், குறைந்த பொருட்கள் மட்டுமே வழங்கியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். பொங்கல் பரிசு தொகுப்புகள் பிளாஸ்டிக் கவரில் வழங்கப்பட்டுள்ளது. வடமாநிலத்தில் இருந்து வாங்கியதால் தமிழக வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கரும்பு ரூ. 33க்கு கொள்முதல் செய்தும் தரமற்ற கரும்புகள் வழங்கப்படுகிறது. காரணம், தி.மு.கவின் தாரகமந்திரமே, ‘கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன்’ தான். பொங்கல் பரிசு தொகுப்பு பெயரில், ரூ. 30 கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த பரிசால் மக்களுக்கு நன்மை இல்லை. தை பொங்கலுக்கு இலவச வேட்டி,சேலை இன்னும் வழங்கப்படவில்லை. திறமை இல்லாத அரசு ஆட்சியில் உள்ளது’ என தெரிவித்தார்.