‘பாரம் ஆப் கன்சர்ன்ட் சிட்டிஸன்ஸ்’ என்ற அமைப்பை சேர்ந்த ஓய்வு பெற்ற 224 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், உத்தரபிரதேச அரசு கொண்டு வந்துள்ள மதமாற்ற தடுப்புச் சட்டத்துக்கு தங்களின் முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த அந்த அமைப்பை சேர்ந்த யோகேந்திர நரேன் எனும் ஓய்வு பெற்ற அதிகாரி, ‘சட்டவிரோத மத மாற்றங்களை நிறுத்த இந்த சட்டம் அவசியம். யாராவது மத மாற்றம் செய்ய விரும்பினால் அவர்கள் சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மாற்றங்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது அரசாங்கத்தின் உரிமை’ என்று கூறினார். சமீபத்தில் ஓய்வு பெற்ற 104 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இந்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை அரசுக்கு அனுப்பிவைத்தனர். இதை பெரிது படுத்திய ஊடகங்கள், ஆதரவு செய்தியை திட்டமிட்டே மறைக்கின்றன.