ரசீது போட்டு ஊழல் நடக்குது.

பாரத பிரதமர் மோடியால், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு நேரடியாக கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் துவங்கப்பட்டது. ஜல் ஜீவன் திட்டம். இத்திட்டம் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தக் கூடியது. இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது இலவசமாக வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பது திட்டத்தின் முக்கிய நோக்கம். ஆனால் தமிழகத்திலுள்ள பல கிராமங்களில் இத்திட்டத்திற்கு 1,000 முதல் 5,000 ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது. சில இடங்களில், இதற்கு பல்வகை ரசீது என்று போலி ரசீதுகளும் கொடுத்துள்ளனர். அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், உள்ளூர் தலைவர்கள், அரசியல்வாதிகள் போன்றோரால் இதில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இது போன்ற அப்பட்டமான அரசு விதி மீறல்களால், மத்திய அரசின் நற்பெயர் கெடுக்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊழல் பெருச்சாளிகளை கைது செய்ய வேண்டும்.